கணவருக்காக தான் பெற்ற 5 குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை
ரகசியமாக பெற்றெடுத்த 5 குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்.
இதற்கு அவர் கூறும் காரணம் வினோதமானது. அதிக குழந்தைகள் இருந்தால் எங்கே கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் கொன்றதாக தெரிவிக்கிறார்.
ஏற்கனவே அவர் 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். குழந்தைகளை கொலை செய்த தகவல் தெரியவர அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பிளென்ஸ்பர்கில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மன் நாட்டு சட்டப்படி அந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக