புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் உள்ள லங்காஷயர் மாகாணத்தில் உள்ள விட்வொர்த் என்னும் இடத்தில் வசித்துவரும் ஜான், ருத் லின்ச் தம்பதியருக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில்நால்வர் நன்கு படித்து பணியில் இருக்கும் நிலையில், 19 வயதுடைய ஒரு
மகளால் அவர்களுக்குத் தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஜென்னிஸ் லின்ச் என்ற அந்தப் பெண், 14 வயதிலேயே, குடிப்பதற்காக அவர்கள் வீட்டுக் காரைத் திருடி இருக்கிறாள். 16 வயதினில் தன்னைவிட 20 வயது அதிகமுடையவனுடன் கொண்ட தொடர்பால் இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளாள். இவளைத் தனியே குடித்தனமும் வைத்துப் பார்த்தனர் அந்தப் பெற்றோர். ஆனாலும் அவள் தொடர்ந்து மற்றவர்களிடம் பொருளுதவி பெற்றும், இல்லையெனில் தாய் வீட்டில் திருடியுமே வாழ்ந்திருக்கிறாள்.

தற்போது, வீட்டில் இருந்த நகைகளையும், தந்தையின் தங்க வாட்சையும் திருடியதால் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். முன்பே இரண்டு முறை ஜென்னிஸ் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு தண்டனை ஏதுமின்றி வெளியே விடப்பட்டாள்.

இப்போதும், அவளை விசாரித்த நீதிபதி அவள் மனம் திருந்துவாள் என்ற நம்பிக்கையுடன் 12 மாதங்கள் அவள் பெற்றோர் வீட்டிற்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், அவளை வெளியில் விட்டுவிட்டார். ஆனால் அவரது தாயாரோ தன் மகள் திருந்த வேண்டும் என்றால் அவளை சிறையில் போடுவதுதான் பலனளிக்கும் என்று கூறுகிறார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top