அதை கொலை வழக்காகப் பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களையும், தட்டிக் கேட்டவர்களையும் பொலிஸார் தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழ்ககரையில் கடந்த 16.3.2013 அன்று ஜானகிராமன் என்ற டிரைவர் 8 வயது முஸ்லீம் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டான்.
இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனர். அதனை எதிர்கொள்ள முடியாமல், தனது எஜமானன் வீட்டில் ஓடி ஒளிந்த ஜானகிராமன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். உண்மை நிலை இப்படியிருக்க கீழக்கரை காவல்துரை அதனை தற்கொலை வழக்காக பதிவு செய்யாமல் கொலை வழக்காகப் பதிவு செய்து அப்பகுதி மக்களை அலைக்கழித்து வருகிறது.
பாதிக்கபப்ட்ட முஸ்லீம் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து முஸ்லீம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதனை இந்திய தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது.
கீழக்கரை காவல்துறை தொடர்ந்து முஸ்லீம் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை இந்திய தவ்ஹீத் ஜமாத் கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக