நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி கேரளாவில் பிறந்தார்.
பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி, பேன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்.
நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக