கார்த்தி தனது மகளுக்கு தூய தமிழ் பெயரும், கடவுளின் பெயருமான உமையாள் என்ற பெயரை வைத்துள்ளார்.
கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ரஞ்சனி.
குழந்தைக்கு ஸ்டைலாக பெயர் வைக்கப் போகிறார்கள் என்று பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் கார்த்தி-ரஞ்சனி ஜோடி தங்கள் மகளுக்கு தூய தமிழ் பெயரும், கடவுளின் பெயருமான உமையாள் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸ்டைலான பெயர்களை வைக்கவே பெற்றோர் விரும்புகின்றனர். அப்படி இருக்கையில் கார்த்தி தனது மகளுக்கு உமையாள் என்று பெயர் வைத்துள்ளார். அவரது அண்ணன் சூர்யா தனது மகளுக்கு தியா என்றும், மகனுக்கு தேவ் என்றும் பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக