புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெற்றோரை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகள் இரத்தினபுரி - கஹவத்தை பிரதேச சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இரத்தினபுரி - கெஹெல்வத்த - பொத்துபிட்டியில் வசிக்கும் 2 தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட ஆறு பிள்ளைகளே இவ்வாறு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இரக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

6 பிள்ளைகள் உள்ள குறித்த வீட்டில் 7வது பிள்ளையை பெற்றெடுக்கவென தாய் கடந்த 5ம் திகதி பிரசவத்திற்கென வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் தந்தையும் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இவ்விருவரும் இதுவரையில் வீடு திரும்பவில்லை எனவும் இவர்கள் தொடர்பில் தகவல் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் அநாதரவான 6 பிள்ளைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு இரக்குவானை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமறிப்பு நிலையத்தில் அவர்களை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top