மனைவி, மகள் ஆகியோருடன் மீண்டும் சேர்கின்றமைக்காக சொந்த சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய துணிந்து உள்ளார் கஹவத்தையை சேர்ந்த நிசாந்த திசாநயக்க என்கிற இளைஞன்.
இவர் ஒரு சமையல்காரன். வறுமையில் உள்ளார். இதனால் இவரது மனைவியின் அம்மா எப்போதும் இவரை எதிர்த்துக் கொண்டே இருப்பார்.
இந்நிலையில் இவரது மனைவி, மகள் ஆகியோர் கடந்த மாதம் இவரை விட்டுப் பிரிந்து சென்று உள்ளனர்.
இவரது மனைவியின் அம்மா வீட்டுக்கு போய் விட்டனர்.
சொந்தமாக வீடு ஒன்றை கட்டித் தருகின்ற பட்சத்தில் அல்லாது திரும்பி வர மாட்டார் என மனைவி பிடிவாதமாக உள்ளார்.
இவருக்கு மனைவி, மகள் ஆகியோர் மீது கொள்ளைப் பிரியம்.
இந்நிலையில் குடும்பத்துடன் மீள இணைகின்றமையையே விரும்புகின்ற இவர் வீடு கட்டுகின்றமைக்கு வேறு மார்க்கம் இல்லாத நிலையில் சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய முடிவெடுத்து உள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக