புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூரிச் மாநிலத்தைச் சேர்ந்த குஸ்தவ்(Gustav) என்பவர் தனது 4 வயது மகனைத் தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிறுவனின் தாய் ஒரு விலைமகளாக இருப்பதால் அவருடன் அனுப்பி வைக்க விருப்பமில்லாத குஸ்தவ் ஒரு விடுதியில் தங்கியிருந்த பொழுது தனது மகனை மனைவி பறித்துச் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில் அவனைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் விடுதி ஊழியர்கள் வந்து அவரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர் என்று ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தரப்பு சட்டதரனி விண்டர்துர்(Winterthur) கூறுகையில், இவருக்கு ஆயுள்தண்டனை அளிக்க வேண்டும் என்று நகர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளதாக ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இது போன்று கடந்த 1990ம் ஆண்டு அவருடைய முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகனையும் கொலை முயற்சி செய்ய ஈடுபட்டதில் இவருக்கு எட்டாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top