வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த, சிறுவர்கள் இருவர், எரித்து கொலை செய்யப்பட்டனர்.கேரளா வல்லகடவு பொன்நகர் காலனியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது
மகன்கள் பகவதி, 17, சிவா, 11. தங்கவேலு மனைவி, ஆறு மாதங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி, தோட்டத் தொழிலாளி மாரிமுத்துவுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இதனால், மனம் உடைந்த தங்கவேலு, குழந்தைகளுடன், அருகில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 21ம் தேதி, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த, பகவதி மற்றும் சிவா, தீயில் கருகி இறந்தனர்.
சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான, ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. அவர்களது, தாயின் கள்ளக்காதலன் மாரிமுத்து மீது, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அவர், ஏற்கனவே சிறுவன் பகவதியை மிரட்டியுள்ளார். மேலும், சம்பவத்தன்று மாரிமுத்துவை, சிலர் அப்பகுதியில் பார்த்ததாகக் கூறினர்.
மேலும், சிறுவர்கள் கருகிக் கிடந்த அறையை, ஆய்வுக்காக, போலீசார் திறந்தபோது, மண்ணெண்ணெய் வாசனை வந்தது. இதனால், சிறுவர்கள் எரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்துவை, கேரளா போலீசார் தமிழகத்தில் தேடுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக