புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அதிகமான வேலைப்பளு காரணமாக திருமண திகதியை மறந்ததால் குறித்த சீனரின் திருமணம் நின்று போனது.

சீனாவை சேர்ந்த டேங் ஜின்ஷி என்பவருக்கும் ஷாங் என்ற பெண்ணுக்கும் கடந்த 13ம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வேலை பளுவால், தன் திருமண திகதியை மறந்தார் டேங் ஜின்ஷி.

இதனால் இவரது திருமணம் அன்றைய தினம் நடைபெறவில்லை. பின்னர் திருமணத் திகதியை நினைத்துக் கொண்ட ஜின்ஷி, மணமகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். திருமண நடைபெற உள்ள நாளை கூட மறந்துவிட்ட ஜின்ஷியை, இணையதளத்தில் ஏராளமானவர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

திருமண திகதியை மறந்துவிட்டு அவர் என்ன வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தாரா? என ஒருவர் கேலி செய்துள்ளார். இன்னொருவர், இந்த ஆளெல்லாம் திருமணத்துக்கு லாயக்கு இல்லாதவர் என சாடியுள்ளார்.

எனினும் ஷாங்! நாங்கள் அனைவரும் அவரை மன்னித்து விட்டோம்; நீயும் மன்னித்து விடு என கருணையுள்ளம் கொண்ட ஒருவர், கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு, மணமகள் என்ன பதில் சொன்னார் என்ற தகவல் வெளியாகவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top