புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கடந்த வாரம் முழுவதுமே YOUTUBE இணையத்தில், சென்னை பகுதிக்கான மிகவும் பிரபலமான வீடியோக்கள் பகுதியில் முதல் இடத்தில் இருந்தது ´தங்க மீன்கள்´ படத்தின் டிரெய்லர்.


டிரெய்லரை பார்த்தவர்கள் அனைவருமே தங்களது பேஸ்ஃபுக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் SHARE செய்து வந்தார்கள். ´மகள்களுக்கும், அப்பாக்களுக்கும் மட்டுமே தெரியும் முத்தம் காமம் இல்லையென்று´ என நெத்தியடி வசனங்கள் அடங்கியது அந்த டிரெய்லர்.

´தங்க மீன்கள்´ படத்தினை கெளதம் மேனன் தனது PHOTON KATHAS நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். ´கற்றது தமிழ்´ இயக்குனர் ராம் இயக்கி நடித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சாதனா என்ற குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறது.

´தங்க மீன்கள்´ படத்தின் டிரெய்லருக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு குறித்து இயக்குனர் ராம் "இலக்கியத்தில் பொருள்வயிற் பிரிவு என்று ஒரு பகுதி உண்டு. அதாவது பொருள் தேடி தலைவன் சென்றுவிட, தலைவி படும் கஷ்டங்களைப் பாடல்கள் சொல்லும். தலைவனுக்கும் அந்த கஷ்டங்கள் இருக்கும்.

ஆணுக்கும் அன்பும் தாய்மையும் உண்டு என்பதைச் சொல்லும் படம் இது. அதாவது இறந்த பின்பும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான் என்பதை சொல்கிறேன்.

அப்பா, மகளுக்கான உறவு என்பது மற்ற உறவுகளை விட மகத்தானது. அந்த உறவை யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறேன். எல்லா குழந்தைகளும், பெற்றோருக்கு தங்க மீன்கள்தான் என்ற பொருளில் தலைப்பு வைத்துள்ளேன்.
படத்தின் டிரைலர் இந்தளவு மக்களைச் சென்று சேரும் என்று நினைக்கவில்லை. இளம் வயதுள்ளவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. டிரைலர் பார்த்துவிட்டு வந்த மெயில்களும் போன்கால்களும் இளம் வயதுள்ளவர்களிடம் இருந்துதான் அதிகம் வந்திருக்கிறது.

நல்ல படைப்புக்கான ரசனை அதிகரித்துக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top