லண்டனில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த தொலைக்காட்சி நடிகையை கற்பழித்த குற்றத்திற்காக 25 வயது இந்திய வாலிபர் ஒருவர்
கைது செய்யப்பட்டார். கற்பழிக்கப்படும்போது
தொலைக்காட்சி நடிகை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த சோபி ஜான் என்ற 25 வயது இளைஞர் லண்டனுக்கு மாணவர்கள் விசாவில் சென்றார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட விசா காலாவதியான பின்னும் சட்ட விரோதமாக தங்கியீருந்துள்ளார். இந்நிலையில் லண்டனில் உள்ள Southwark Crown Court என்ற பிரபல ஓட்டலில் பகுதிநேர ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் இந்த ஓட்டலுக்கு தங்குவதற்காக வந்திருந்த தொலைக்காட்சி நடிகைக்கு உதவி செய்ய அவர் பணிக்கப்பட்டார். நடிகை இரவு நேரத்தில் கடுமையான குடிபோதையில் தனது அறைக்கு வந்து தூங்கிய போது, அவரை இந்திய வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். தூக்கத்தில் இருந்ததாலும், சரியான போதையில் இருந்ததாலும் நடிகையால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. பாலியல் உறவுக்கு பின்னர் நடிகையில் ஐபோனில் படம் பிடித்த வாலிபர் அந்த படங்களை தன்னுடைய நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதுவிஷயமாக பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு லண்டன் கோர்ட் பத்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக