புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டு எஜமானியும் அவரது பிள்ளைகளும் இணைந்து குறித்த இலங்கைப் பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி, செல்லிடப் பேசி மூலம் படமெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வீட்டு எஜமான் குறித்த பெண்ணை, பிரம்பால் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

சித்திரவதைகளை தாங்க முடியாத குறித்த பெண், அந்நாட்டு பொலிஸில் முறைப்பாடு செய்து நாடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது காலி காராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top