புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரம்யா.
அவர் கூறுகையில், கதாநாயகியாக நீடிப்பது கடினமான விஷயம்.


அழகாகவும், உறுதியாகவும் இருப்பதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் மனம் உடைந்துபோகும் தன்மைதான் அதிகம் இருக்கும்.

சமீபத்தில் இறந்த ஜியா கான் பார்ப்பதற்கு அழகாகவும், திறமையாகவும் இருக்கிறார். இந்த தன்மை மட்டுமே சினிமாவில் நீடித்திருக்க உதவுவதில்லை என்பது அவரது முடிவு உணர்த்துகிறது.

அதிர்ஷ்டமும், ஹிட்டும்தான் நடிகையின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு நாயகியும் தன் வாழ்வில் ஒரு நாள் கதறி அழும் நிலை வருகிறது.

10 வருடங்கள் கடந்து நான் சினிமாவில் இருந்தாலும் என்னைபற்றி தாழ்வாக சிலர் எண்ணும்போது கதறி அழுதிருக்கிறேன்.

நடிகையின் வாழ்க்கை சொகுசானது என்றால் அது பொய். தோல்வியின்போது உடனிருப்பவர்கள் செய்யும் பரிகாசம் மனதை பாதிக்கிறது.

அதற்காக உயிரை மாய்த்துக்கொள்வது சரி அல்ல. வாழ்க்கை ஒரு சக்கரம், வெற்றி- தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top