புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சகோதரியின் நான்கரை அடி நீளமான தலை மயிரை வெட்டி வீசிய தம்பி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முரண்பாடு ஏற்படுத்திக் கொண்ட சிறிய தந்தையை, தமது இளைய சகோதரியின் திருமணத்திற்கு அழைத்த காரணத்தினால் ஆத்திரமுற்ற சகோதரர் மூத்த சகோதரியின் தலை மயிரை வெட்டியுள்ளார்.

இருபது ஆண்டுகளாக வளர்த்து வந்த நான்கரை அடி தலை மயிர் வெட்டி வீசப்பட்டதாக குறித்த சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறிய தந்தைக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் தந்தையுடன் மோதல் ஏற்பட்டதாகவும் அதனை தடுக்கச் சென்ற சகோதரியின் தலை மயிரை குறித்த நபர் வெட்டி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்ப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top