புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தில் வசித்து வந்த சிறுமியொருவரின்  வயிற்றில் தலைமுடி அடைத்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

14 வயது சிறுமியான இவருக்குத் தலைமுடிகளை விழுங்கும் "ரபுன்செல் சின்ட்ரோம்" என்ற அரிய வகை வியாதி இருந்துள்ளது. இதனால் இவர் உட்கொண்ட முடியானது, 1.5 மீ நீளத்திற்கு வயிற்று பகுதி மற்றும் குடல் பகுதியைத் தாண்டி மலக்குடல் வரை அடைத்துக் கொண்டிருந்தது.

கடந்த நான்கு வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுகன்யாக்கு வலி தீவிரமாகவே, நகரில் இருந்த ஏசியன் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.

சுகன்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிறு கடினமாக இருந்ததை உணர்ந்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது முடி அடைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அதன் பின்பு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த முடிப் பந்து நீக்கப்பட்டது. நோயாளி ஆபத்து நிலையைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சிறிது காலம் சென்றிருந்தால் முடியானது குடல் சுவரில் துளையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவித்திருக்கக் கூடும் என்று மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான பரபல் ராய் தெரிவித்தார்.

"ரபுன்செல் சின்ட்ரோம்" என்பது தலைமுடியை விழுங்குவதால் சிறு வயதினருக்கு வரும் அரிய குடல் வியாதி ஆகும். உலகிலேயே இதுவரை மொத்தம் 30 நோயாளிகள்தான் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் மூன்று பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top