தமது ஐந்து வயது நிரம்பிய மகளின் வாயில் சூடு வைத்த தாயை தெஹியத்தகண்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சூடு வைக்கப்பட்ட சிறுமி மஹியங்கனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமது மகள் சிறு வயதிலேயே கோள் சொல்லும் பழக்கத்தில் ஈடுபட்டமையினால் அதனைத் தடுக்கும் வகையிலேயே கம்பியொன்றினை சூடாக்கி தனது மகளின் வாயில் வைத்ததாக அத்தாய் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்தார்.
சூடு வைக்கப்பட்டமை தொடர்பாக அயலவர்கள் பொலிஸாரின் 119 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுத் ததற்கமையவே பொலிஸார் விரைந்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அச்சிறுமியின் தாயாரைக் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்தும் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக