புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் முதுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்க சென்ற மரதன் வீராங்கனை ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அங்கு தான் அவர் நிறைமாத கர்ப்பினியாக இருப்பது கண்டறியப்பட்டது.


 33 வயதாகும் ட்ரிஸ் ஸ்டெயின் என்ற அந்த வீராங்கனை மரதன் விளையாட்டு போட்டிக்காக கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால் கடுமையான முதுகுவலி ஏற்பட்டு அவதிப்பட்டார்.

சிகிச்சைசக்காக அவர் மருத்துவமனைக்குச் செல்லவே அங்கு எதிர்பாராத விதமாக அவர் கர்ப்பமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ வலிதான் அவருக்கு முதுகுவலியாக ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார் ட்ரிஸ் ஸ்டெயின். ஏற்கனவே ஸ்டெயினுக்கும் அவரது கணவருக்கும் 11 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதைத் தவிர மூன்று குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். இதையடுத்து ஜான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஸ்டெயினுக்கு குழந்தை பிறந்துள்ளது. யூன் 22ம் திகதி நடைபெற உள்ள மாராத்தான் போட்டிக்காக ஸ்டெயின் பயிற்சி பெற்று வந்த நிலையில் கடுமையான முதுகுவலி ஏற்பட்டது.

அவரது கணவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று 5 நிமிடத்திற்குள் அழகான குழந்தைக்கு தாயானார் ஸ்டெயின். 5 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்ட அந்த குழந்தை 2.9 கிலோ கிராம் இருக்கிறது. இதற்கு மிரா( மிராக்கிள் என்று பொருள் வருமாறு) பெயர் சூட்டியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top