புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ். பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக, விடுதி முகாமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பிரதேச செயலரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக் காட்டப்பட்டது.

மேற்படி விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராய சென்ற வேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும் யுவதியிடம் அடையாள அட்டை இல்லாத நிலையில் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெண்கள் அமைப்பின்படி தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக் காட்டினார்.

என்னை பொறுத்தவரையில், 18 வயது பெண்ணும், 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபசாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபசாரமாகும்.

அவ்வாறு யாழ்.நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

வடக்கில் வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் ஆனால், வடக்கிலும், தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின்படி பார்க்கின்றோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
 
Top