புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவரை கற்பழித்து, அவரது கர்ப்பத்தையும் கலைக்க வற்புறுத்திய நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,20, 000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது
.

உத்திரபிரதேசம் படவுன் மாவட்டத்தில் உள்ள உஷைத் பகுதியை சேர்ந்தவரான 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அஹ்பரன் சிங் என்பவர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இந்த நபர், அந்த சிறுமி கர்ப்பமானப்பிறகு அவரை கருவை கலைத்துவிடுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்துப்போன சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்தப் பிறகு அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அஹ்பரன் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட துணை நீதிபதி திருப்பதி குற்றவாளி அஹ்பரன் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்தும், 1,20,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 1,20,000 ரூபாய் அபராதத் தொகையில் 70 சதவீதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top