புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் மின்சாரம் தாக்கி இறந்த பதினோரு வயது சிறுமியின் உடலைக் கல்லறைத் தோட்டத்தில் இருந்து தோண்டியெடுத்து பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.


குஜன்வாலா மாவட்டம் கிலா டேடார் சிங் பகுதியைச் சேர்ந்த பதினோரு வயது சிருமி ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.

பின்னர், இறுதிச்சடங்கிற்குப் பிறகு அவரது சடலம் அருகில் இருந்த கல்லறைத் தோட்டத்தில் சகல மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் பிராத்தனை செய்வதற்காக அந்த மாணவியை அவரது உறவினர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கே, அச்ச்றுமியின் சடலம் அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து விட்டனர்.

இரவில் யாரோ மர்ம நபர்கள், அந்தச் சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து, அதனுடன் உடலுறவு கொண்டது பரிசோதனையில் தெரிய வந்தது. ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

பின்னர், போலீசாரின் சமாதானத்தால் கலைந்து சென்றனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக கல்லறைத் தோட்டத்தின் வெட்டியானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Top