புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வளர்ந்துவரும் நாடுகளில் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேரடியாக வெப்கம் மூலம் பார்க்கும் மேலை நாட்டவரின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது.

குறிப்பாக இணையத்தில் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த வறிய குடும்பங்களுக்கோ அல்லது அவற்றை ஏற்பாடு செய்யும் குற்றக் கும்பல்களுக்கோ பணத்தை கொடுத்து, அந்த சிறார்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யப்பட்டு, அதனை மேற்கத்தைய நாட்டவர் நேரடியாக ஸ்கைப் மற்றும் வெப்கம் மூலம் பார்த்து மகிந்து வருவதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிறார் துஷ்பிரயோகம் மற்றும் இணைய பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.

வறுமை தாக்கியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களை இப்படியான பாலியல் குற்றவாளிகள் இணையத்தின் மூலம் இலக்கு வைப்பது அதிகரித்து வருவதாகவும், சிறார் பாதுகாப்பு கொள்கைகள் பலவீனமாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் மாத்திரம் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகள் 70,000 வரை இணையத்தின் மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
Top