புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மும்பையின் ஓர்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்துக்கொண்டு தனது 8 வயது மகளுடன் நடைபாதை குடிசையில் வசித்து வந்தார்.


நேற்று காலை தூங்கி விழித்த அந்தபெண் மகளை காணாமல் தேடினார். குடிசைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதாக சிலர் கூறினர்.

இதனையடுத்து, அங்கு ஓடிச்சென்ற அவளது தாயார் சிறுமியை தூக்கிச் சென்று நாயர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

ஆனால், ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்வதற்கு முன்னதாகவே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்ட பின்னர் கழுத்து நெறிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் வசிக்கும் சிலரை கைது செய்து, மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்த சமூக விரோதிகள் அவளை கொன்றுள்ள சம்பவம் ஓர்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Top