புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தாமே பிரத்தியேகமாக தயாரித்த விமானத்தில் 23 நாடுகயைச் சுற்றி வலம் வந்துள்ளனர். இவர்கள் 16 வருடமாகக் கட்டப்பட்ட உள்ளூர்த் தயாரிப்பான சிறியதொரு விமானம் மூலம் 99 பறப்புகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.


இத்தம்பதிகளுக்கு 23 நாடுகளையும் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு வருடமும் ஒரு நாளும் தேவைப்பட்டுள்ளது. பிரித்தானிய வான்சேவையின் பணியாற்றி ஓய்வுபெற்ற விமானியும் அவரது மனைவியும் தான் இந்தச் சாதனையை படைத்துள்ளனர்.

இவர்கள் தாஜ்மகால் மற்றும் கிசாவிலுள்ள பிரமிட்டுக்கள் அடங்கலாக உலக அதிசயங்களையும் கண்டுகழித்துள்ளனர். இதற்கு 1320 கலன் எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இச் சுற்றுலாவுக்கு 2,400,000 ரூபா செலவாகியுள்ளது.

இவர்கள் இருவருமே இந்த தனிவிமானத்தை உருவாக்கினார்கள். பின்னர் இதற்கான இயந்திரத்தை நியூயோர்க்கிலிருந்து பெற்றிருந்தனர். வெறுமனே 4 பைகளில் அடங்கிய முக்கிய பாகங்களைக் கொண்டு தாமே றெசினால் இதனை ஒட்டிச் செய்திருந்தனர்.

இதேயளவு பணத்தினால் தம்மால் ஒரு வர்த்தக விமானத்தை வாங்கமுடிந்திருந்தாலும் அப்படிச் செய்யாது, 18 மாதங்களில் இதைச் செய்துமுடித்தது பாரிய சாதனையென்றே அவர் கூறினர்.

இதனை இவர்கள் The Canoe என்று அழைத்தனர். முதலில் இவர்கள் இதில் 2007இல் தான் விமான பயணத்தை மேற்கொண்டனர்.

மொத்தமாக இவ் விமானத்தின் மூலம் 37,398 மைல் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் பொதுவாக மணிக்கு 155 மைல் சராசரி வேகத்திலும் 6500 அடி உயரத்திலும் பறந்தனர்.

இத் தம்பதிகள் அடுத்ததாக வட தென் துருவங்களுக்கிடையே பறப்பதற்கு திட்டமிட்டள்ளதாக கூறியுள்ளனர்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top