முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebook இல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல்
மனைவியிடம் மாட்டுப்பட்டார். பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது.
இப்படங்களை 3 மாதங்களின் பின்னர் Facebook இல் கண்ட முதல் மனைவி காவற்றுறையினரைத் தொடர்புகொண்டு முறைப்பாடு தெரிவித்திருந்தார். இவர் தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 பவுண் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக