புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கொழுப்பு சத்துமிக்க பால், இறைச்சி, வெண்ணை, பீஷா மற்றும் எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன் பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள் மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி விதித்துள்ளது.
இதனால் அவற்றின் விலை முன்பைவிட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
இதனால் அவற்றை இப்போதே வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க் தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில் கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.
எனவே அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட்களுக்கு விசேஷமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள் பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top