புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அடுத்த 60 ஆண்டுகளில் ஓசோன் மாசுபாட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பூமி வெப்பமயமாதலால் பருவ நிலை சீர்கேடுகள் ஏற்படும். அதனால் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றுஎச்சரிக்கின்றனர்.


குறிப்பாக பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் இருக்குமாம். அங்கு இறப்பு விகிதம் 10 முதல் 14 சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர். ஓசோன் மாசுபாடு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் இந்த சதவீதம் அதிகமாக இருக்காது என்ற ஆறுதல் தகவலையும் கூறுகின்றனர்.

ஈரோபியன் ரெஸ்பிரேடரி சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு: ஓசோன், ஸ்ட்ராடோஸ்பியர் பகுதியில் உள்ளது. புறஊதாக் கதிர்கள் பூமியை தாக்காமல் பாதுகாப்பது இதுதான். இந்தக் கதிர்கள் பூமியை நேரடியாக தாக்கும்போது பூமியில் வெப்பம் அதிகரிப்பதோடு மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து உயிரினங்களுக்கு பாதுகாப்ப அளிக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழத்தொடங்கியுள்ளது குறித்து விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.

பூமி வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்), பனிப்பாறைகள் உருகுவது மற்றும் அதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து தொடர் எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்பு ணர்வையும் மீறி இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுரையீரல் பாதிப்புகளால் சுவாசிப்பதில் சிக்கல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகம். இந்த நிலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஓசோன் படலம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறது ஆராய்ச்சி தரப்பு.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top