இதனால் சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மங்காத்தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேபரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் பரிதாபத்தை தேடிக் கொண்டுள்ளார்.
சரண் தன்னிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டு விட்டதால், அவரை மன்னித்து விட்டேன் என்று கூறிய சோனா, சரண் மீதான புகாரை வாபஸ் பெற்ற கையோடு வெளிநாட்டுக்கு பறந்தார். இதற்கிடையில் அவர் அளித்துள்ள பேட்டியில்தான் மேற்சொன்ன குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். "எனக்கு நேர்ந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது”.
என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள் மானபங்கம் செய்தார்கள். இதையெல்லாம் எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன்.
ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன். வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன்.
இனி அந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். வெங்கட் பிரபுவும், நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார். |
0 கருத்து:
கருத்துரையிடுக