புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



http://www.wristbandconnection.com/wristbands-events/uploaded_images/universal-children-day-bracelet-774945.gifஅக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகவும் , உலக முதியோர் தினமாகவும் உலகெலாம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய தலைவர்கள் எதிர்கால முதியவர்கள் ஆகிறார்கள் . 
எல்லோரும் சிறுவராக நீண்டகாலம் இருக்க முடியாது . அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர்
. இது இயற்கை . இப்படி சொல்வார்கள் இதையும் கேளுங்கள் . பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள் . அதன் அர்த்தம் என்ன தெரியுமா ? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும் . அதனை பார்த்து குருத்து ஓலையின் நினைப்பு தான் எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு . தானும் ஒருநாள் இதே ஒலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதுக்கு அப்போது புரியாது . ம்ம்ம்ம் இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் .
இன்று எத்தனை சிறுவர்கள் புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் பிச்சை பாத்திரமும் , கல்லுகள் , வண்டில்கள் என்று இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் . பள்ளி செல்ல வேண்டிய நேரத்தில் படிப்பை தொலைத்துவிட்டு பிச்சை ஏந்தி சாப்பிட்டு பிழைக்க வேண்டிய நிலைமை . இன்று உலகளவில் சிறுவர்கள் பலர் சொல்லொணா துன்ப , துயரங்களை சந்திக்கிறார்கள் .

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top