இறுதியாக மும்மொழியப்பட்ட விமான நிலையப் பரிசோதனை நடைமுறைக்கு வந்தால் எதிர்காலத்தில் பயணிகளுக்கு பாரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்ஸ்ரடாமில் இடம்பெற்ற உலக விமானப் பாதுகாப்பு மாநாட்டில் இதுபற்றி முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இந்த விமானப் பரிசோதனையானது ஒருவரை ஸ்கானிங் வசதிகொண்ட ஓர் பாதையால் நடந்துசெல்வதன் மூலம் பரிசோதிக்கலாம்.
மூன்று நிறமுள்ள ஒடுங்கிய பாதைகள் இருக்கும். நீலநிறம் அடிக்கடி பயணிப்பவர்களுக்கும் ஊதா சாதாரண பயணிகளுக்கும் செம்மஞ்சள் நிறம் கூடுதல் பரிசோதனைக்காகத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இதன்போது மக்கள் தமது உடைகளின் பைகளை வேறாக்க வேண்டியதில்லை. உடைகளைக் கழற்றவேண்டியதில்லை.
ஒவ்வொருவராக 20 அடி சுரங்கப்பாதையால் நடந்துசென்று இரும்பு, திரவம், மடிக்கணினிகள் மற்றும் வேறு அபாயமிக்க பொருள்கள் காணப்படுகின்றதா எனப் பரிசோதிக்கப்படத் தேவையில்லை.
99.9 வீதமானோரினால் தாங்கள் எந்தவிதமான தொந்தரவினையும் பெறுவதில்லையென்று கூறியுள்ளனர்.
வான் போக்குவரத்து அதிகாரி இந்தப் புதிய பயணிகள் என்ற திட்டமானது விரைவாக அனைவரையும் பரிசோதனை செய்ய உதவுமென்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக