புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஎகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொ‌ன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த
கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நா‌ட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்டில் உறுதி செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது .


இதைத்தொடர்ந்து குற்றவாளிகளான வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கடந்த வெள்ளியன்று அந்நாட்டு சட்டத்தினைபடி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. மேலும் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு துவங்கி இதுவரை 58 பேருக்கு இது போன்று கொடூர தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top