சீரிய சிந்தனைகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை குரங்குகளுக்கும் சாத்தியம்தான் என்று ஆய்வில் உறுதியாகி உள்ளது. மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் களை கூட குரங்குகள் அநாயசமாக விளையாடி அசத்தியதை பார்த்து
ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்கா, டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழக நியூரோ இன்ஜினியரிங் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், மிக்கேல் நிக்கோலஸ் தலைமையில் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.
குறிப்பாக சவாலான கம்ப்யூட்டர் கேம்ஸ் களை விளையாடவும் கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்ததைவிட குரங்கு கள் சமயோசிதமாக கேம்ஸ் விளையாடி அசத்தி உள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: மூளைக்கு வேலை என்ற அடிப்படையில் குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி கிட்டி உள்ளது. மூளை சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த முறையை கொண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆய்வின் முக்கிய நோக்கம் குரங்குகளுக்கு உடல் அசைவின்றி மூளையின் சிந்தனை திறனை கொண்டு செயலாற்ற வைப்பதுதான். இதில் கம்ப்யூட்டர் திரையில் ஒரு குரங்கு இருக்கும். அதை பயிற்சி குரங்குடன் பழக செய்ய வேண்டும். மூளையில் உருவாகும் சிந்தனைகள் சமிக்ஞைகளாக பிரதிபலித்து விளையாட்டில் வெற்றி பெற உதவுகிறது.
இப்படி வெற்றி பெறும் குரங்குகளுக்கு பயிற்சியின் போது அவற்றுக்கு விருப்பமான ஜூஸ் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டது. இதனால் அவை முன்பை விட விளையாட் டில் கூடுதல் கவனம் செலுத்தின. இந்த முறையில் மனிதர்களுக்கு குறிப்பாக பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தொடர் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ரோபோடிக் எக்சோஸ்கெலிடன் என்ற இப்பயிற்சி கம்ப்யூட்டர் மற்றும் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக