புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும்.மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் டகியுல்லா.சிறு வயதிலிருந்தே இவரது உடல்
உறுப்புகள் வேகமாக வளர்ந்தன. டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமிதமான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கிறார் அவர். நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமிதமான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதிரியை கேட்டார்.

எனினும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். இப்போது சிகிச்சைக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றுள்ளார். 29 வயதான இவர் 8 அடி(246 செ.மீ) உயரம் உள்ளார். எனினும் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான சுல்தான் கோசனைவிட(8 அடி 3 அங்குலம்) உயரம் குறைவுதான். அதேநேரம் இவரது இடது பாதத்தின் நீளம் 1 அடி 3 அங்குலம்(38.1 செ.மீ), வலது பாத நீளம் 1 அடி 2.76 அங்குலம் ஆகும்.

இதை கின்னஸ் அமைப்பு உறுதி செய்ததுடன் உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராகவும் அங்கீகரித்துள்ளது. இவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் பிரான்ஸ் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். எனது நீளமான பாதத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஏனெனில் இதன் மூலம் என்னுடைய பிரச்னைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என நம்புகிறேன் என பிராஹிம் தெரிவித்தார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top