புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம்.அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல
வகையான மென்பொருள்கள் உள்ளது. அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.
இதில் நீங்கள் எந்த வகையான வீடியோவையும் பார்க்கலாம். இதில் இல்லாத வீடியோவே கிடையாது என்று கூறலாம். அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள வீடியோ சிலவற்றிற்கு ஓடியோவை தேடினாலும் கிடைக்காது. சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஆடியோவாக மாற்றலாம்.
அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிக எளிதாக இந்த தளம் மூலம் ஆடியோவாக மாற்றிவிடலாம்.
வீடியோவை ஆடியோவாக மாற்ற:http://www.youtube-mp3.org/ இந்த தளத்திற்கு சென்றவுடன் பின்னர் உங்கள் யூடியுப் வீடியோவின் சுட்டியை(LINK) கொப்பி செய்து கொள்ளுங்கள்.
அந்த தளத்தில் உள்ள பெட்டியில் அதை பேஸ்ட் செய்யுங்கள். பின்னர் CONVERT VIDEO என்ற பொத்தானை அழுத்தினால் போதும், உங்கள் வீடியோ ஆடியோவாக மாற்றப்படும்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top