தங்களின் தொலைந்து போன செல்ல நாயைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10000 யூரோக்களை நன்கொடையாக கொடுப்பதற்கு ரஷ்யத் தம்பதிகள் முன்வந்துள்ளனர்.
இந்தத் தகவலை இத்தாலியின் பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
Doberman pinscher தம்பதிகளின் ஜோனி என்ற நாய் ஒரு மாதத்துக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றிலிருந்து காணாமல் போனது.
அறையில் தூங்கிக் கொண்டிருந்த நாய் குறித்த தம்பதிகள் வெளியில் காலாற நடந்து சென்று விட்டு திரும்பி வந்தபோது காணாமல் போய் விட்டது.
நாய் திருடப்பட்டு கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதைத் தான் கொடுத்து வைத்த நாய் என்பார்களோ?
0 கருத்து:
கருத்துரையிடுக