சவூதி அரேபியாவில் இந்திய சகோதரர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த முகமது ஜாகீர் அகமது மற்றும் அகமது யாசின் ஆகியோர், சவூதி அரேபியாவின் தைஃப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் தொழிற்சாலை பணியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை ஒன்றை, உரிய காலத்தில் முடித்துத் தராததால் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், மேற்கூறிய சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக