யாழ். குடாநாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் பெருமளவு பிள்ளைகளினால் பெற்றோர்கள் சேர்க்கப்படுவதாக சமூக சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
தமது பெற்றோர்களை வீடுகளில் வைத்துப் பராமரிப்பதற்கு பிள்ளைகள் தயங்குவதாகவும் பெரும் சிரமமாக கருதுவதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதாக இந்தப் பணிமனை தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரச உத்தியோகத்திலுள்ள பிள்ளைகள் தங்கள் வேலை நிமித்தம் உரிய முறையில் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தங்கவைத்து பராமரிப்பதற்கான தொகையை மாதா மாதம் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கு பாரம்பரியச் சொத்துக்களை பராமரிக்கும் பெற்றோர்களின் தொகையும் தனிமையில் வீடுகளில் வாழும் முதியவர்களின் தொகையும் அதிகரித்துள்ளது என யாழ் மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக