புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கெக்கிராவ ஏ9 வீதியிலுள்ள சூரியகம 54வது மைல் கல் அருகில் நேற்று (06ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் லொறியொன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி யதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்து கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த எட்டுப் பேரும் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை அதிகாரி ஜயந்த விஜேசூரிய தெரிவித்தார்.


இச்சம்பவம் பற்றி பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணை மருத்துவம் செய் வதற்கென மினுவங்கொடைப் பிரதேசத் திலிருந்து மரதன் கடவளைக்கு எடுத்துச் சென்ற வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹொரங்கல்லயைச் சேர்ந்த அஜந்தா 50 வயதுடையவராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலை பிரேதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.


அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகர் காமினி மீகஹகும்புற, கெக்கிராவ பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டி.பி.சோமதிலகவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி ருக்மால் ரத்நாயக்க மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top