புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அம்பாறை ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் ஐஸ்கிறீம் உண்டதனால் மயக்கமடைந்த நிலையில் 31 சிறார்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கண்ணகிபுரம், நாவற்காடு, ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணியளவில்
வீதிவழியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஜஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம் பொற்றோர்கள் ஜஸ்கிறீம்களை வாங்கி தமது சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.

இந்த ஜஸ்கிறீம்களை உண்ட சிறுவர்கள் சிறிது நேரத்தின் பின்னர் மயக்க மடைந்துள்ளதாகவும் இதனையடுத்து மயக்கமடைந்த சிறுவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பெற்றோர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இவ் ஜஸ்கிறீம் வியாபாரியை தேடிவருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top