புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலி கடற்பரப்பில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் வெளிநாட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரஜையே இவ்வாறு காணாமல் போய் உயிரிழந்துள்ளார்.


கடந்த 24ம் திகதி காணாமல் போன குறித்த நபரின் சடலம் நேற்று மாலைவரை கிடைத்திருக்கவில்லை. உனவட்டுனவை அண்மித்த கடற்பரப்பில் சடலம் மிதப்பதாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top