புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகப் பிரசித்தி பெற்ற ஓவியர் லியனோ டாவின்ஸியின் 500 வருடங்கள் பழமையான ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. டாவின்ஸியி நலன் விரும்பியாக இருந்த பிரபு ஒருவரின் மகளின் திருமண வைபவத்தின் போது இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.


இவ்ஓவியத்தில் உள்ள முகத்தின் இடதுபக்க உருவம் இதில் பிரதிபலிக்கிறது. இந்த ஓவியம் ஏல விற்பனையில் 21,850 ஸ்டேர்லிங் பவுணுக்கு விலை போனது. விலை மதிக்க முடியாத இந்த ஓவியம் 1998ம் ஆண்டு நிவ்யோர்க் ஏலம் ஒன்றில் 14,000 பவுண்களுக்கு மாத்திரம் விலை போயிருந்தது.

குறித்த ஓவியம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்ததாகவே முன்னர் கருதப்பட்டது. எனினும் இது 500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓவியம் என தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த திருமணம் நடைபெற்ற 1496ம் ஆண்டு, வைபவத்தை சித்தரிக்கும் அல்பத்திலிருந்து இவ் ஓவியம் களவாக கிழித்து எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

இந்த ஓவியத்தில் லியானோ டாவின்ஸயின் விரல் அடையாளங்கள் இருப்பது இவ் ஓவியத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது. இத்தகைய நிலையில் இந்த ஓவியம் டாவின்ஸியின் கைவண்ணத்தில் தான் வரையப்பட்டது என்பதை ஆய்வாரள்கள் உறுதி செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top