புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரை கட்டியணைத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார் இந்திய தூதர். இந்த காட்சியை ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர, 10 நாடுகள் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்படும். தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்ய ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ஓட்டளிக்க வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2003ம் ஆண்டில் பாகிஸ்தான் தற்காலிக உறுப்பினராக இருந்தது. அதற்கு பின் வாய்ப்பு எதுவும் பாகிஸ்தானுக்கு தரப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. காஷ்மீர் மற்றும் தீவிரவாதப் பிரச்னையால் பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு தருமா என்று பல நாடுகள் சந்தேகப்பட்டன. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. இதனால், மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவிக்க, பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டதும் ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா உசைன் ஹாரூனை ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த காட்சியைப் பார்த்து பல நாடுகளின் பிரதிநிதிகளும் ஆச்சரியம் தெரிவித்ததுடன் வாழ்த்தும் தெரிவித்தனர்.

இது குறித்து அப்துல்லா கூறுகையில், “இந்த நாள் மிக நல்ல நாள். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கும் அந்நாட்டின் தூதருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையில் காஷ்மீர் பிரச்னை உட்பட பல வேறு முக்கிய பிரச்னைகள் உள்ளன. காஷ்மீரைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். கவலைப் பட ஒன்றுமில்லை. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு தரும் என்று நம்பினேன். அது நடந்தது என்றார். இந்திய தூதர் ஹர்தீப் சிங் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள் இருந்தபோதிலும், பல பிரச்னைகளில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து ஒற்றுமை நிலவுகிறது என்று கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top