சத்தீஷ்கரில் வாலிபர் வயிற்றில் நட்டு, போல்டு, சாவி கொத்து , இரும்பு காசு என மொத்தம் 6 கிலோ எடைகொண்ட இரும்பு காயலான்களை டாக்டர்கள் அறுவை சிகி்ச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூர் அருகே கோர்காமா என்ற கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ்ர், 25 என்ற மலைவாழ் இளைஞர், நேற்று, ராய்பூரில் சுருஸ்தி மருத்துவ ஆராய்ச்சி மயைத்திற்கு கிச்சைக்காக வந்தார். அப்போது தனது வயிறு மிகவும் வலிஎடுப்பதாகவும் கூறினார்.
இளைஞரை பரிசோதித்த டாக்டர் எஸ்.எம்.யாதவ், கமலேஷ்வரின் வயிற்றை தொட்டு பார்த்தார், அப்போது வயிறு பாறை போன்று கடினத்தன்மையாக இருப்பதை உணர்ந்தார். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்ததில் உலோகங்கள் இருப்பதற்கான தடயம் இருந்தது.
பின்னர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த பின்னர் உலோகங்களை அகற்றிய டாக்டருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த இளைஞனின் வயிற்றில் 421 இரும்பு காசுகள், 196 நட்டு ,போல்டுகள், 17 சேப்டிபின்கள், சாவி கொத்துகள் என மொத்தம் 6 கிலோ எடையில் ஒரு கயலான கடையில் உள்ள பொருட்கள் வயிற்றில் இருந்தன.
இது குறித்து டாக்டர் யாதவ் கூறுகையில், தற்போது அந்த வாலிபர் உடல்நிலை சீராக உள்ளது. எப்படி இவைகளை அவர் உட்கொண்டார் என தெரியவில்லை என்றார்.
மேலும் வாலிபர் கமலேஷவர் தெரிவிக்கையில், தனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இரும்பு உலோகங்களை சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது.
இதனால் கண்ணில் தென்படும் இரும்பு சாமான்களை உடனே வாயில் போட்டு விழுங்கிவிடுவேன். சமீபத்தில் தான் எனக்கு வயிற்று வலி அதிகமாகவே டாக்டரிடம் வந்தேன் என்றார்.
இது போன்று இரும்பு பொருட்களை உண்பதுஒருவித மனநோய் என மனதத்துவ டாக்டர் ஒருவர் கூறினார். மேலும் கடந்த சில நாட்களாக கமலேஷ்வர் இரும்பு பொருட்களை விழுங்குவது எங்களுக்கும் தெரியும் என பெற்றோர் கூறினர்
0 கருத்து:
கருத்துரையிடுக