நான்கு பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி இருக்கிறார் இந்த மன்மதக் குஞ்சு. இவருக்கு வயது 45 . இவரது பெயர் Shaun Richings. இவர் பேஸ்புக்கில் தூண்டில் போட்டது விதவைப்பெண்களுக்கு மட்டும் தான்.முதலாவதாக 58 வயதான Hazel Wickings என்ற விதவைப் பெண்ணுக்கே வலை விரித்து ஆறு ஆண்டுகளாக ஏமாற்றி வாழ்ந்து வந்துள்ளார்.இரண்டாவதாக Tina Balne என்ற 45 வயது
விதவைப் பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
விதவைப் பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அதன் பின்னர் Tracie Clarke என்ற 42 வயதுப் பெண்ணுடன் இரண்டு வருடங்களாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.அடுத்து 38 வயதான Denise Draper என்ற பேனுடன் கடந்த நான்கு மாதங்களாக உறவு வைத்துக் கொண்டுள்ளார். இறுதியாக நான்கு பெண்களிடமும் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். ஏமாற்றப்பட்ட மூன்று பெண்கள் சேர்ந்து இவருக்கு எதிராக பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதில் ஏமாற்றுக் காரன், பொம்பிளைப் பொறுக்கி என்று எல்லாம் விபரித்துள்ளார்கள். அவர் ஆண்கள், பெண்கள் இருவரின் மீதும் ஆர்வம் உள்ளவராம்.அவரது சொந்த பேஸ்புக் கணக்கில் உறவு நிலைக்கு சிக்கலான உறவு நிலை என்று குறித்து வைத்துள்ளார்.இவரது ஏமாற்று விளையாட்டுக்களை உலகுக்கு அம்பலப்படுத்துவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் ஏமாற்றப்பட்ட பெண்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக