புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் திருடச் சென்ற வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததால் திருடன் போலீசிடம் சிக்கி கொண்டான். ஒரேகான் மாகாணத்தில் ஆளில்லா வீட்டிற்குள் ஜாசன் லியோன் (32) என்பவன் திருடுவதற்காக உள்ளே புகுந்துள்ளான். ஆனால், அந்த வீட்டில் டிவியை போட்டு நிகழ்ச்சிகளை
பார்க்க தொடங்கிவிட்டான். அங்கிருந்த சோபாவில் சுகமாக அமர்ந்தவன் திருட வந்ததை மறந்து டிவியில் கவனத்தை செலுத்தினான்.

 சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் உள்ளே ஜாசன் இருப்பதை கண்டு போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவனை கடுமையாக தாக்கினர். பின்னர் வந்த போலீசார் ஜாசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி சென்றதற்காக சிகிச்சைக்குப்பின் அவன் கைது செய்யப்பட்டான். இதுபோன்று அண்மையில் லண்டனில் ஆளில்லா வீட்டுக்குள் புகுந்து திருடன், அங்குள்ள படுக்கையறையில் தூங்கியதால் போலீசிடம் மாட்டியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top