தாய்ப்பாசத்திற்கு இணையானது இதுவரையில் அறியப்படவில்லை. ஆனால் உலகில் நடக்கும் சில விஷயங்கள் தாய் என்ற சொல்லுக்கே அவமானம் தேடித்தருபவையாக உள்ளன.அந்த வகையில் மூன்று மாத குழந்தை தனது தாயாலும் பாட்டியாலும் கொல்லப்பட்ட கொடூரம் நடந்தேறியுள்ளது.
56 வயதான இந்த கிழவியும் அவள் மகளும் இணைந்து மகளின் குழந்தையை தள்ளு வண்டில் ஒன்றில் வைத்து வீதியின் கீழாக செல்லும் பள்ளமான பகுதியொன்றில் வைத்து தள்ளிவிட்டனர்.
குழந்தை தவறுதலாக விழுந்ததாக இருக்கட்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். இந்த சம்பவத்தின் போது அருகில் யாரும் இருக்கவில்லை.
ஆனால் அருகில் இருந்த கட்டிடமொன்றின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமராவில் இது பதியப்பட்டிருந்தது. அவர்கள் கமராவை பார்த்தபோது அதிர்ச்சியடைந்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதை ஆதாரமாக வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக