புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோந்தாம்பிட்டி பிரதேசத்தில் சுமார் 7 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 7 கிலோ 960 கிராம் நிறையுடைய
கஞ்சா மீட்கப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் படகின் மூலமாக கோந்தாம்பிட்டி கடற்கரைப்பகுதியில் வந்திறங்கியபோது மன்னார் விலேஜ் கடற்படை முகாமைச்சேர்ந்த கடற்படையினர் அவரைக் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top