புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பேஸ்புக் மிகப்பிரபலமான சமூக இணையதளம். இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது பேஸ்புக்காக தான் இருக்கும்.ஒரு சில நேரத்தில் உங்களுடைய பேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய நீங்கள் நினைக்கலாம் இதற்கு
பல்வேறு காரணங்கள் உள்ளது முக்கியமாக உங்கள் கணக்கை யாராவது ஹாக் செய்தாலோ, இந்த தளத்தினால் நேரம் வீணாக செலவாகிறது என நினைக்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருப்பதால் ஒன்றை செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.பிறகு Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Security என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
Security லிங்கை கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் கீழே இருக்கும் Deactivate your account என்ற ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

அடுத்து இன்னொரு விண்டோ வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில ஆப்ஷன்கள் காட்டும் அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.Email opt out என்ற இடத்தில் டிக் மார்க் கொடுக்கவும்(டிக் பண்ணாமல் விட்டால் பேஸ்புக்கில் இருந்து Invitations,Notifications ஈமெயில்கள் வந்து கொண்டே இருக்கும்)அடுத்து கீழே உள்ள Confirm பட்டனை அழுத்தவும். அடுத்து இந்த கணக்கின் பாஸ்வேர்ட் கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup விண்டோ வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.

அவ்வளவு தான் உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது ஓபன் செய்தால் This Content is Current Unavailable என்ற செய்தி தான் வரும்.
இந்த கணக்கு தற்காலிகமாக தான் பேஸ்புக் தளத்தில் இருந்து நீக்கப்படும். ஆதலால் இந்த கணக்கை நீங்கள் எப்பொழுது நினைத்தாலும் மீண்டும் செயல்படுத்தி கொள்ளலாம்.எப்பொழுதும் போல இந்த கணக்கின் ID, PASSWORD கொடுத்து நுழைந்தால் தானாகவே Reactivate ஆகிவிடும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top