புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 7 பாடசாலை மாணவர்களில் இருவர் கடலில் மூழ்கி மரணமானதுடன் 5பேர் உயிர் தப்பியுள்ளனர். (5.11.2011) பிற்பகல் தளவாய் பாடசாலையில் 8ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் ரியூசன் வகுப்பு முடிந்த பின்னர் ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.


குளித்துக்கொண்டிருந்த போது 7மாணவர்களுமே கடலில் மூழ்கியுள்ளனர். இந் நிலையில் கடலில் மூழ்கிய இம்மாணவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஐந்து மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்ததைச்சேர்ந்த மீனவர்களும் பொதுமக்களும் இம்மாணவர்களை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் ஏறாவூர் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

உயிர் தப்பிய ஐந்து மாணவர்களும் மயக்க நிலையில் இருப்பதால் ஏறாவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நான்கு மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக சென்றுள்ளனர். ஒரு மாணவர் ஏறாவூர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக ஏறாவூர் வைத்திய சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top