மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது காதலனைத் தான் திருமணம் செய்ய அனுமதி வழங்குமாறு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் காதலி.வவுனியா நெயகுளம் வீரபுலத்தைச் சேர்ந்த சுதர்ஜினி என்பவரே இவ்வாறு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியவராவார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எனது காதலரான சக்திவேல் இலங்கேஸ்வரன் புதிய மகசீன் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். நான் அவரை 12 வருடங்களாக நேசித்து வந்துள்ளேன். அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்த்திருந்தேன்.
ஆனால் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை நான் சிறைச்சாலையில் திருமணம் செய்ய விரும்புகிறேன். இதற்கான அனுமதியை தந்துதவுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
எனது காதலரும் தங்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்கிறார் என்பதை அறிந்துள்ளேன்.
இந்நிலையில் எமது திருமணப் பதிவினை சிறைச்சாலையில் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
0 கருத்து:
கருத்துரையிடுக